News June 19, 2024
எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. ஏடிஎஸ்பி குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் 41 மனுக்கள் பெறப்பட்டன. இதில் சீட்டு பணம் தராதது, இணைய வழிய குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக மனுக்கள் தரப்பட்டது. இதில் டிஎஸ்பி சீராளன், வெங்கடகிருஷ்ணன், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News January 20, 2026
BREAKING: அரக்கோணம் EX.MLA காலமானார்!

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பவானி கருணாகரன். இவர் அரக்கோணம் தோல்ஷாப் பகுதியில் வசித்து வந்தார். உடல்நல குறைவால் இன்று (ஜனவரி 20) காலமானார். அவரது உடலுக்கு அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவு அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News January 20, 2026
ராணிப்பேட்டை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

ராணிப்பேட்டை மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <
News January 20, 2026
ராணிப்பேட்டை: அழுகிய நிலையில் ஆண் சடலம்!

திமிரி அருகே விலாரி கிராம கூட்ரோடு அருகே முட் புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்த திமிரி போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு 45 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. முதற்கட்ட விசாரணைக்கு பிறகு அழுகிய நிலையில் கிடந்த உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


