News August 20, 2024
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நாளை தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை ஆன்லைனில் தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 22-ஆம் தேதி நேரடியாக சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு மருத்துவ இடத்துக்கு 4 மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.
Similar News
News January 22, 2026
சென்னையில் வாலிபர் தீயிட்டு தற்கொலை!

சென்னை மாதவரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில், இன்று காலை புகை மூட்டமாக காணப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விசாரணையில், அந்த அறைக்குள் இருந்த அடையாளம் தெரியாத வாலிபர், தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளது தெரியவந்தது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், அவருடைய விவரம் குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
News January 22, 2026
தனிச் சின்னத்தில் போட்டி – ஜி.கே.வாசன்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், பாஜக தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், 20ம் தேதி சென்னைக்கு வருகை தந்தார். அவரை, ‘NDA’ கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். அதன்படி, நுங்கம்பாக்கத்தில் தங்கியிருக்கும் பியூஷ் கோயலை, தமாக தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார். பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் தேர்தலில் தமாக தனிச் சின்னத்தில் போட்டியிடும்” என்றார்.
News January 22, 2026
சென்னை: உங்களிடம் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-22311049) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க


