News August 7, 2025
என்னென்ன சான்றிதழ்களை பெறலாம்

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச்சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு-குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் மற்றும் வேலையில்லாதோர் சான்றிதழ் ஆகியவற்றை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 7, 2025
சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சென்னையில் வளர்ப்பு பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் வரும் நவ.9, 16 மற்றும் 23 என ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள நாய் இனக்கட்டுப்பாடு மையத்தில் காலை 8.00 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News November 7, 2025
சென்னை: அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. தகவலின் பேரில் தேனாம்பேட்டை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு இருப்பது போல தகவல் புரளி என தெரியவந்தது. தற்போது போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 7, 2025
சென்னையில் இன்று கரண்ட் கட்!

சென்னை, மின்வாரியம் சார்பில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அம்பத்துார் பழனியப்பா, புதுார், ஏ.கே.அம்மன், பானு நகர், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், ஆலந்துார் எம்.கே.என்., சாலை, ஆஷர்கானா, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி., சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி-2 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்.


