News November 13, 2025
எனது இன்ஸ்பிரேஷன் அஜித்: துல்கர் சல்மான்

அஜித் இந்த வயதிலும் தனது பேஷனை நோக்கி பயணிப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். அஜித்தின் ரேஸிங் வீடியோக்கள் தனக்கு பெரும் உத்வேகத்தை தருவதாகவும் கூறியுள்ளார். அதேபோல் பல நாடுகளுக்கு அஜித் பைக்கிலேயே சுற்றி வந்ததை பற்றி பெருமையாக பேசிய துல்கர், அவருக்கு பிடித்ததை தயக்கம் இன்றி செய்து வருவதாகவும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 16, மார்கழி 1 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News December 16, 2025
எல்லா வீரர்களும் VHT-ல் விளையாட வேண்டும்: BCCI

விஜய் ஹசாரே கோப்பை(VHT) டிச.24-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் தேசிய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே விராட், ரோஹித் VHT-ல் கலந்துகொள்ள பிசிசிஐ கூறியிருந்த நிலையில், இப்போது அது அனைவருக்கும் பொருந்தும் என அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயஷ் ஐயருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
இந்தியாவில் பாரினர்ஸ் அதிகம் விரும்பும் இடங்கள்

இந்தியாவின் தனித்துவமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. இதனால், இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்கள், இந்தியாவில் அதிகம் செலவிடும் டாப் இடங்கள் எவை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


