News April 9, 2024

எடப்பாடியில் அமைச்சர் தேர்தல் பரப்புரை

image

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி ஆதரித்து எடப்பாடியில் இன்று
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் .அப்போது
இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; மனு நீதி பேசும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது பா.ம.க. 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யவில்லை’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

Similar News

News December 10, 2025

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!

image

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.10) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தகவல் தெரிவித்தார்.

News December 10, 2025

தொழிலாளர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை labour.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தொழிலாளர் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பதிவு செய்த விவரத்தினை inspectoroflabour.tn.gov.salem@gmail.com F அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ற ஆட்சியர்!

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், சர்வதேச மனித உரிமைகள் தின விழா உறுதிமொழி ஏற்ப நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்த தக்க பன்னாட்டு சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் குறித்து, உண்மையுடனும் பற்றுடன் நடந்து கொள்வேன் என உறுதி வாசிக்க மற்றவர்கள் திரும்ப வாசித்தனர்.

error: Content is protected !!