News November 14, 2025

ஊழல் வழக்கில் அம்பானி: மும்பை HC நோட்டீஸ்

image

இந்தியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானி ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார். கிருஷ்ணா கோதாவரி படுகையில், ₹12,000 கோடி மதிப்புள்ள ONGC எரிவாயுவை சட்டவிரோதமாக அம்பானி திருடியதாக கூறி, கிரிமினல் வழக்குப்பதியவும், சிபிஐ விசாரணை கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த மும்பை HC, சிபிஐ மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், நவ.18-ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Similar News

News December 11, 2025

ஆழ்கடலை ஆராய தயாராகும் இந்தியா PHOTOS

image

இந்தியா முதன்முறையாக மனிதர்களை ஆழ்கடலுக்குள் அனுப்ப தயாராகி வருகிறது. இதற்காக சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கிக் கப்பல், ஆழ்கடலை ஆராய்வதற்கு தயாராகி வருகிறது. மத்ஸ்யா என்பது விஷ்ணுவின் முதல் அவதாரமான மீனைக் குறிக்கிறது. மேலே உள்ள இதன் போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 11, 2025

தவெக பரப்புரையில் வைரலான பெண் எஸ்பிக்கு கெளரவம்

image

புதுச்சேரி தவெக மக்கள் சந்திப்பின்போது, ஒரு டோக்கனுக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஒரு டோக்கனுக்கு இருவரை அனுமதிக்குமாறு புஸ்ஸி ஆனந்த் போலீஸிடம் வலியுறுத்தினார். அதற்கு, <<18511098>>SP ஈஷா சிங்<<>> ஆவேசமாக எச்சரித்தது கவனம் ஈர்த்தது. இந்நிலையில், விஜய் பரப்புரையில் சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக ஈஷா சிங்கிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளார்.

News December 11, 2025

சென்செக்ஸ் 427 புள்ளிகள் உயர்வு!

image

இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. சென்செக்ஸ் 426.86 புள்ளிகள் உயர்ந்து 84,818 புள்ளிகளாக வர்த்தகமானது. US பெடரல் ரிசர்வ் அதன் வட்டி விகிதத்தை 25bps குறைத்த நிலையில், 3 நாள்களாக சரிவில் இருந்த நிப்டி இன்று 140.55 புள்ளிகள் உயர்ந்து 25,898 புள்ளிகளில் வர்த்தகமானது. குறிப்பாக ஆட்டோமொபைல்ஸ், வங்கிகள், IT, ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.

error: Content is protected !!