News October 8, 2024

ஊராட்சி மன்ற தலைவர்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை

image

விழுப்புரம் எஸ்.பி., ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஊராட்சி மன்ற தலைவர்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும் தெரிவித்துள்ளார். எனவே காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

Similar News

News December 7, 2025

விழுப்புரம்: வயிற்று வலியால் பெண் விபரீத முடிவு!

image

விக்கிரவாண்டி அடுத்த எம். குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி மனைவி சித்ரா (54) கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், 5ம் தேதி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு அவர் பூச்சி மருந்து குடித்து மயங்கினார். அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

News December 7, 2025

விழுப்புரம்: மருமகனுக்காக தன்னுயிரை மாய்த்த மாமா!

image

விழுப்புரம்: மேலக்கொந்தையை சேர்ந்த குமார் (53), மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மருமகனை சென்று பார்த்து வந்துள்ளார். அதையொட்டி மனஉளைச்சலில் இருந்து வந்த அவர், அருகிலிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 7, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.07) காலை வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!