News May 7, 2025

ஊட்டி அரசுமருத்துவமனையில் வேலை வாய்ப்பு

image

ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக 1 ஐடி கோடினேட்டா், 1எக்கோ டெக்னீஷியன் ,4 டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 21 முதல் 45.சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்ப முகவரி: முதல்வா், நிா்வாக அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்து நகா், உதகை 643005.(ஷேர் செய்யுங்கள்)

Similar News

News November 19, 2025

மசினகுடி: யானை காணவில்லை

image

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்துக்கு உட்பட்ட, வாழைத்தோட்டம், மசினகுடி, சீகூர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில உலா வந்த ரிவால்டா, என்ற காட்டு யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் குறைபாடு காரணமாக, பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு இருந்தது, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திடீரென யானை காணாமல் போனது. அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

News November 19, 2025

நீலகிரி மாவட்டம்: தடை அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் போன மாவட்டமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் அதிகமான சுற்றுலா பயணிகள் டால்பின் ஹவுஸ் மற்றும் லாம்ஸ் ராக் போன்ற சுற்றுலா தலங்களில் விரும்பி ரசிக்கின்றனர். தற்போது சுற்றுலா தலங்களில் நடைபாதை மற்றும் சாலை பணிகள் போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

News November 18, 2025

நீலகிரி: FREEயாக தங்கம், பணம் தந்து திருமணம்!

image

நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் SHAREIT

error: Content is protected !!