News May 1, 2024
உழைப்பாளர் சிலையாக மாறிய மாணவர்கள்

மே தினத்தையொட்டி தொழிலாளர்களின் உழைப்பை போற்றும் வகையில், உழைப்பாளர் சிலை போல் திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே மாணவர்கள் நின்றனர். உழைப்பவர்களால் தான் இந்த தேசம் வலிமையாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும் ஆனால் உழைப்பாளர் சிலைக்கு தனி சிறப்பு உள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவர்கள் நின்றனர்.
Similar News
News December 16, 2025
திருச்சி: ரயில் மோதி பரிதாப பலி

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 16, 2025
திருச்சி: குறைதீர் முகாமில் பெறப்பட்ட 412 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. அதில், பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை என 412 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.