News May 4, 2024

உளுந்தூர்பேட்டையில் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

image

உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு திருச்சியில் இருந்து விழுப்புரம் வரை பயணத்தை துவங்கியுள்ள பயணியர் ரயிலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பிலும் உளுந்தூர்பேட்டை வளர்ச்சிக்கு குழு சார்பிலும் மலர் தூவி ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் Dyfi மாநில இணை செயலாளர் செல்வராஜ் உளுந்தூர்பேட்டை வளர்ச்சி ஒருங்கிணைப்பாளா் ரமேஷ்பாபு மற்றும் ஹரிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News

News November 7, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.6) இரவு முதல் இன்று (நவ.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

காணாமல் போன பள்ளி மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், பகண்டை அருகே உள்ள அவரியூர் கிராமத்தில் மாணவர்களை பார்த்த பொதுமக்கள் பகண்டை கூட்டுச்சாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

News November 6, 2025

திருநங்கைக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் தாட்கோ திட்டத்தின் கீழ் திருநங்கை ஒருவருக்கு சுயதொழில் தொடங்குவதற்கு கடனுதவிக்கான ஆணைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.6) வழங்கினார். இந்த நிகழ்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட சமூகநல அலுவலர் தீபிகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!