News August 22, 2024

உருட்டு கட்டையால் தாக்கப்பட்ட மாணவன்

image

ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவரது மகன் அஸ்வின்ராஜ் வயது (17). இவர் வெண்ணாவல்குடி அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளிமுடிந்து சூத்தியன்காடு செல்லும் சாலையில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் சிலர் அஸ்வின்ராஜை உருட்டு கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த மாணவன் மருத்துவமனையில்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News November 11, 2025

புதுக்கோட்டை: முதியவர் மீது கார் மோதி விபத்து

image

புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சக்குடியை சேர்ந்தவர் காத்தமுத்து (75). இவர் நேற்று கீழமஞ்சக்குடி கிளை சாலையை கடக்க முயன்ற போது, காரில் வந்த ரஞ்சித் குமார் (27) மோதியதில் முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் ஜெகதாபட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 11, 2025

புதுகை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

புதுகை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 11, 2025

புதுகை மாவட்டத்தில் ஓர் புதிய அறிமுகம்!

image

புதுகை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கில் பண பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி பெற E-KYC அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பதை APT 2.0 திட்டத்தின் கீழ் QR குறியீடு மூலம் பெறலாம். காகிதமற்ற பண பரிவர்த்தனைகளை இதன் மூலம் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு, புதுகை மாவட்ட அஞ்சலக கூட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!