News August 4, 2024
உதயநிதி ஆகஸ்ட் 7ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிகளை இன்று அமைச்சர் மாசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அப்போது பேட்டி அளித்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.10.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கட்டடத்திற்கு, ஆகஸ்ட் 7ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News January 20, 2026
சென்னையில் சிறப்பு முகாம்- DON’T MISS

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ம் தேதி வெளியிடப்பட்டது. புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம் செய்ய ஜன.18ம் தேதி வரை வழங்கப்பட்ட அவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 4,079 ஓட்டுச்சாவடிகளிலும் வரும் 24, 25ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
சென்னை: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
சென்னை: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு கிளிக் <


