News August 4, 2024
உதகை: முன்னாள் எம்பி மறைவுக்கு நினைவஞ்சலி

உதகையில் இளம்படுகர் சங்க அரங்கில் மறைந்த முன்னாள் பாஜக எம்.பி. மாஸ்டர் மாதன் அவர்களுக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குண்டன், சாந்தி ராமு, உதகை தொகுதி எம்.எல்.ஏ.கணேஷ், நான்கு சீமைகளின் தலைவர்கள் பங்கேற்று மாஸ்டர் மாதன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Similar News
News January 20, 2026
நீலகிரி: 12-ம் வகுப்பு போதும்.. ஆதார் துறையில் வேலை!

நீலகிரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <
News January 20, 2026
நீலகிரி: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnlgdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0423-2443962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News January 20, 2026
நீலகிரியில் பயங்கரம்.. ஒருவர் அடித்துக் கொலை!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்பமூலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாரங்கமூலா பழங்குடியின கிராமத்தில் கோபி என்பவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். டிஎஸ்பி கல்யாண் குமார், இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் நடந்த விசாரணையில், இறந்தவரின் தங்கை மகன் சுதீஷ் என்பவர் மதுபானம் வாங்க பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் மரக்கட்டையால் தாக்கி கோபியை கொன்றுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


