News August 5, 2024
உதகை: சுதந்திர தினவிழா ஆலோசனை கூட்டம்

உதகை , அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா கொடாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் இன்று சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் கெளசிக் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News January 14, 2026
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள்!

பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பழைய பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழை துணிகள், ரப்பர், டயர் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்தவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், காற்றின் தரத்தை பாதுகாத்திட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News January 14, 2026
நீலகிரி: போஸ்ட் ஆபிஸ் வேலை

நீலகிரி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் நாளை ஜன.15-க்கு பிறகு <
News January 14, 2026
குன்னூரில் இப்பகுதியில் செல்ல தடை

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் குன்னூர் – வெலிங்டன் இடையே உள்ள முக்கிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.


