News June 18, 2024
உடுமலையில் துணைத் தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் +2 டூ தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெறாத மாணவர்கள் ,தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடைப்பெறுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளை முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
Similar News
News January 20, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்! முக்கிய தகவல்

காங்கயம் தாலுகா, பாப்பினி கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற 108 நபர்கள், நிபந்தனைப்படி அங்கு வீடு கட்டி வசிக்கவில்லை என்பது ஆய்வில் தெரிந்தது. அவர்களை அடையாளம் காண முடியாததால், 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அல்லது ஆதிதிராவிடர் நல அதிகாரியை அணுகத் தவறினால் பட்டாக்கள் ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
திருப்பூர் இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News January 19, 2026
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பல்லடம் நகர், ப.வடுகபாளையம், வடுகபாளையம் புதூர், அம்மாபாளையம், அனுப்பபட்டி, மங்கலம் ரோடு, வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, சாமந்தங்கோட்டை, செம்மாண்டம்பாளையம், காவிலிபாளையம்,, 15 வேலாம்பாளையம், பச்சாம்பாளையம், பள்ளிபாளையம், காளம்பாளையம், பரமசிவம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


