News November 25, 2025
உங்க வேலையை இங்க காட்டாதீங்க: பிரேமலதா

தேமுதிக கொடி, பேனரை அகற்றிவிட்டால் கூட்டம் நடக்காது என்பது சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நடக்காது என்பதை போல இருப்பதாக பிரேமலதா விமர்சித்துள்ளார். கோவையில் மட்டும் இந்த அராஜகம் நடப்பதாக கூறிய அவர், தேமுதிகவை பார்த்து பயமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உங்கள் வேலையை தேமுதிகவிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று அவர் மறைமுகமாக செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 13, 2026
அதிமுக வேட்பாளர் தேர்வில் இபிஎஸ் போடும் பிளான்!

அதிமுகவில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் EPS விறுவிறுப்பாக நேர்காணல் நடத்தி வருகிறார். அதில், தொகுதியில் உள்ள செல்வாக்கு, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, கடந்த காலங்களில் கட்சிக்காக ஆற்றிய பணி உள்ளிட்டவைகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறாராம். குறிப்பாக, திமுகவின் விமர்சனத்திற்கு ஆளாகாத வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளாராம்.
News January 13, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று(ஜன.13) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹13,170-க்கும், சவரன் ₹400 உயர்ந்து, ₹1,05,360-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாளில் மட்டும் தங்கம் சுமார் ₹4,560 அதிகரித்துள்ளது. <<18842242>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.