News April 10, 2024
ஈரோட்டுக்கு தனி இரயிலில் வந்த 2000 டன் நெல்

ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக நாகப்பட்டினத்தில் இருந்து 2000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயில் மூலம் ஈரோடு இரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. பின் நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் இரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினர். இந்த நெல் அரவைக்கு அனுப்பப்பட்டு, அரிசியாக்கப்பட்டு ஈரோடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Similar News
News December 16, 2025
கவுந்தப்பாடி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

கவுந்தப்பாடி அடுத்த பழனிசாமி கவுண்டர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை, விற்பனை செய்வதாக கவுந்தப்பாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், போலியாக வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்ட எங்களை கொண்டு லாட்டரி என விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அந்தியூர் அருகே பிடிபட்ட மர்ம விலங்கு

அந்தியூர் அருகே உள்ள சங்கரா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னச்சாமி நேற்று இரவு அவரது வீட்டின் வாசலில் மர்ம விலங்கு படுத்திருப்பதை பார்த்து அதனை கூடை போட்டு மூடி வைத்துவிட்டு அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் அங்கு சென்ற வனத்துறையினர் அது புளுகு பூனை என தெரிவித்தனர். அதனை வனத்துறையினர் கைப்பற்றி அந்தியூர் வரட்டு பள்ளம் அணை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.