News August 24, 2024

ஈரோட்டில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

image

மகாராஷ்டிராவிலிருந்து வரத்து குறைந்ததால், ஈரோட்டில் சின்ன வெங்காயத்தைவிட பெரிய வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை ஆகிறது.வழக்கமாக பெரிய வெங்காயத்தைவிட சின்ன வெங்காயம்தான் விலை அதிகமாக இருக்கும்.

Similar News

News November 7, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்கள் ஏற்றுவது வாகனங்களுக்கு சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையை உருவாக்குகிறது. எனவே எடை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

News November 7, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

சாலையில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கு, முன் ஓட்டுநர் உரிமம், காப்பீடு, வாகனப் பதிவு போன்ற அனைத்து ஆவணங்களையும் உடன் வைத்திருக்க வேண்டும். ஓட்டும்போது வேகத்தைக் கட்டுப்படுத்துவது, மிதமான வேகத்தில் ஓட்டவும், அதிவேகத்தில் செல்வதை தவிர்ப்பதும், சாலை விதிகளைப் பின்பற்றுவது, ஓட்டுநர் கவனம் சிதறாமல் இருப்பது, என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News November 7, 2025

ஈரோடு: B.E, B.Tech போதும் வேலை ரெடி

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://www.nsic.co.in/Careers/Index என்ற இணையத்தில் பார்க்கவும்.
7.(SHARE பண்ணுங்க)

error: Content is protected !!