News October 13, 2025

ஈரோட்டில் வசமாக சிக்கிய இருவர்!

image

ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக வலி நிவாரண மாத்திரைகளை இளைஞர்கள் சிலர் போதைக்காக பயன்படுத்துவதாக போலீசாரக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார் சித்தோடு மூவேந்தர் நகரைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் அந்தியூரை சேர்ந்த கார்த்திக் என்ற இரு இளைஞர்களை பிடித்து 20 போதை மாத்திரைகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 15, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 15-12-2025 பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களுடைய நிறை, குறைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News December 15, 2025

ஈரோடு: பட்டா வழங்க கோரி மனு!

image

சிறுவலூர் அடுத்த ஊஞ்சபாளையம் பகுதியில் வசிக்கும் 32 ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு கர்ச்சிபாளையத்தில் 2011 நிபந்தனை பட்டா கொடுக்கப்பட்டது. யாரும் தற்போது வரை குடி ஏறாததால் அந்த பட்டாக்களை ரத்து செய்து மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் பெரியசாமியிடம் 32 குடும்பத்தினர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

News December 15, 2025

ஈரோடு மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

ஈரோடு மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

error: Content is protected !!