News August 22, 2025
ஈரோட்டில் பருவ காய்ச்சலை தடுக்க நடவடிக்கை!

ஈரோட்டில் பருவகால காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் குடிநீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். 3 நாளுக்கும் மேலாக காய்ச்சல், இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். வீடுகளுக்கு அருகில் தண்ணீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்திருக்கவும், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Similar News
News January 21, 2026
ஈரோடு: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே<
News January 21, 2026
கோபியில் வசமாக சிக்கிய நபர்! அதிரடி கைது

கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கர்பாளையத்தைச் சேர்ந்த கருப்புசாமி. இவர் நாட்டுத் துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாடுவதாகப் பங்களாபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
ஈரோடு : வாட்ஸ்அப் வழியாக GAS புக்கிங்!

ஈரோடு மக்களே வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


