News November 25, 2025
ஈரோட்டில் டாஸ்மாக் இயங்காது!

ஈரோடு மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு, வருகை புரியும் வழியில் மற்றும் விழா நடைபெறும் இடங்களில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்க ஏதுவாக, அட்டவணையில் உள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் எப்.எல்.2 என்ற தனியார் மதுபானக்கடையில் நாளை 26ம் தேதி மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
ஈரோட்டில் தடை: கலெக்டர் அதிரடி உத்தரவு!

கர்நாடகாவில் குதிரைகளைத் தாக்கும் ‘கிளண்டர்ஸ்’ நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, ஈரோடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மாவட்டத்தில் பாதிப்பு இல்லை என்றாலும், நோய் பரவலைத் தடுக்க கர்நாடகாவிலிருந்து குதிரைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
விஜயமங்கலம் அருகே விபத்து: ஒருவர் பலி

திருப்பூர் பத்மாவதி நகரைச் சேர்ந்த இளங்கோ (55), கடந்த 11-ம் தேதி பைக் மூலம் பெருந்துறைக்குச் சென்றபோது விஜயமங்கலம் அருகே பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், பெருந்துறை GHல் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 17, 2026
பவானிசாகர் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

பவானிசாகர் அடுத்த பாகுதம்பாளையம், பாரதி நகர் பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த, பப்பண்ணன் (58) என்பவரை, பவானிசாகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 26 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பவானிசாகர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


