News August 7, 2025

ஈரோட்டில் இலவசம்.. உடனே CALL பண்ணுங்க!

image

ஈரோடு கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் நடத்தும் பெண்களுக்கான இலவச தையல்கலை பயிற்சி 18-08-2025 முதல் 24-09-2025 வரை நடைபெறுகிறது. இதற்கு 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. பயிற்சி உபகரணங்கள், சீருடை, உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவுக்கு 87783-23213, 0424-2400338 தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News November 14, 2025

ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளிக்கு விருது!

image

2024-25 ஆம் ஆண்டிற்கான ஈரோடு மாவட்டத்தின் சிறந்த 3 தொடக்கப்பள்ளிகளில் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளியும் தேர்வாகி உள்ளது. அதற்கான விருது மற்றும் கேடயம் வழங்கும் விழா காரைக்குடியில் இன்று (நவ.14) நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியையிடம் விருது மற்றும் கேடயங்களை வழங்கினார்.

News November 14, 2025

குழந்தை கடத்தல் விவகாரம் – எஸ்.பி பாராட்டு!

image

ஈரோடு பவானி லட்சுமி நகரில் பெற்றோருடன் வசித்த 2 வயது குழந்தை, கடந்த அக்டோபர்-16 அன்று நாமக்கல் தம்பதியால் கடத்தப்பட்டது. 25 நாட்கள் தீவிர தேடுதலுக்குப் பிறகு குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட சித்தோடு காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோருக்கு எஸ்.பி சுஜாதா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News November 14, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை வாகனங்கள் ஆய்வு

image

ஈரோடு அடுத்த ஆனைக்கால்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது. இதனை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

error: Content is protected !!