News October 9, 2024

ஈரோட்டில் இலக்கிய திறனறித்தேர்வு

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 37 மையங்களில், பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி என 9,443 மாணவ-மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இதில் சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 பேருக்கு, மாதந்தோறும் ரூ.1,500 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News November 12, 2025

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (11.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம்-1930 மற்றும் குழந்தைகள் உதவி-1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News November 12, 2025

அம்மாபேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

அம்மாபேட்டை வட்டார பகுதி மக்களுக்காக இன்று (12/11/25) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம், ஆனைகவுண்டனுார், ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அதிகாரிகளிடம்
வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 11, 2025

ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் நாளை (நவ.12) ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, நேதாஜி மார்க்கெட் வணிக வளாகம், ஈரோடு (ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4), ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் மண்டபம்-ஆனைகவுண்டனூர் (அம்மாபேட்டை வட்டாரம்), மாணிக்கம் முதலியார் திருமண மண்டபம்-சுள்ளிபாளையம்(பெருந்துறை வட்டாரம்), உக்கரம் சமுதாயக் கூடம், உக்கரம்(சத்தி வட்டாரம்) பகுதிகளில் நடைபெற உள்ளது.

error: Content is protected !!