News May 16, 2024
ஈரோட்டில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள்

ஈரோட்டில் இருந்து வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஈரோட்டில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
டெட் தேர்வுக்கு முன் மாதிரி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடத்தப்படும் டெட் தேர்வுக்கு மண்டல அளவில் முன்மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் எட்டாம் தேதி ஈரோடு வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டு மையத்தில் நடைபெறும் இந்த முன்மாதிரி தேர்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள https://forms.gle/ovgkrtpSSQbAeP6L7 லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்டம் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 6, 2025
ஈரோடு: இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு

இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 9 இல் திண்டல் வெள்ளாளர் கல்லூரியில் நடைபெறுகிறது. இதன் விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் பிளாக் பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும், கண்டிப்பாக ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் வாக்காளர் அடையாள அட்டை பான் கார்டு போன்ற ஏதேனும் ஒன்றை அசலாக கொண்டு வர வேண்டும் 9.30 பிறகு தேர்வு எழுத அனுமதி இல்லை. தேர்வாணையர் சுஜாதா தகவல்.


