News April 9, 2024
ஈரோட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து ரம்ஜான் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.10) முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஈரோட்டில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி போன்ற ஊர்களுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
ஈரோடு: பட்டா வழங்க கோரி மனு!

சிறுவலூர் அடுத்த ஊஞ்சபாளையம் பகுதியில் வசிக்கும் 32 ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு கர்ச்சிபாளையத்தில் 2011 நிபந்தனை பட்டா கொடுக்கப்பட்டது. யாரும் தற்போது வரை குடி ஏறாததால் அந்த பட்டாக்களை ரத்து செய்து மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் பெரியசாமியிடம் 32 குடும்பத்தினர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.
News December 15, 2025
ஈரோடு மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

ஈரோடு மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 15, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு : இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிக்கு முக்கிய பாதுகாப்பு தலை கவசம் ஆகும். பொதுமக்கள் காவல்துறையினருக்கு பயந்து தலைக்கவசம் அணிய வேண்டாம் எனவும், தங்களின் பாதுகாப்புக்காக அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஹெல்மெட் லாக் அணிவது கட்டாயம் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.


