News August 20, 2024

ஈரோட்டில் இன்று மின்தடை

image

ஈரோடு மாவட்டத்தில் மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள்.

Similar News

News January 16, 2026

சிறுவலூரில் பெண் காவலருக்கு கொலை மிரட்டல்!

image

கோபி : சிறுவலூர் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலர் கீதா மணி. இவர் பணியில் இருந்த போது கோபி அருகே குப்பாண்டபாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரியும் செந்தில் என்பவர். போதையில் சிறுவலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலீசை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெண் ஏட்டு கீதா மணி கொடுத்த புகாரின் படி சிறுவலூர் போலீசார் செந்திலை கைது செய்தனர்.

News January 16, 2026

ஈரோடு: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 16, 2026

ஈரோட்டில் 225 குழந்தை திருமணங்கள்: அதிர்ச்சி தகவல்!

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 225 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சட்டப்படி 18 வயதுக்கு கீழ் உள்ள பெண், 21 வயதுக்கு உட்பட்ட ஆண்களின் திருமணத்தை குழந்தை திருமணமாக கருத வேண்டும். பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21க்கு மேல் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். அவ்வாறு 225 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!