News November 19, 2025

ஈரோடு: ரூ.85,000 வரை சம்பளம்.. அரசு வேலை!

image

ஈரோடு மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். யாருக்காவது பயன்படும் அதிகமாக SHARE பண்ணுங்க!

Similar News

News January 13, 2026

ஈரோடு: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

image

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)

News January 13, 2026

பொங்கல் பரிசு: ஈரோடு மக்களே உஷார்

image

ஈரோடு மக்களே, பொங்கலை முன்னிட்டு பரிசு வழங்குவதாக What’s App-ல் பரவும் தகவல்கள் போலியானவை என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இத்தகவல்களில் உள்ள இணைப்புகளை பகிரச் சொல்லி, பரிசு தொகை வழங்குவதாக கூறி மோசடி நடக்கிறது. இவை பண மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால் அதை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

News January 13, 2026

ஈரோடு: அவுட்டுக்காய் கடித்து குட்டி யானை உயிரிழப்பு

image

ஈரோடு, கடம்பூர் வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் ‘அவுட்டுக்காய்’ கடித்ததில் வாய் மற்றும் தாடைப் பகுதி சிதைந்து யானை உயிரிழந்தது உறுதி செய்தனர். இது தொடர்பாக காளிமுத்து (53) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!