News August 8, 2025
ஈரோடு: ரூ.70,000 பணம், தங்கம் தந்து இலவச திருமணம்!

ஈரோடு, வைரபாளையம், காவேரிகரையில், இந்து அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT
Similar News
News November 11, 2025
ஈரோடு: நல்ல சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

ஈரோட்டில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Civil Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு சிவில் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ முடித்தவர்கள் <
News November 11, 2025
பவானி: தாயை கல்லால் அடித்துக் கொலை செய்த மகன்

பவானி அருகே மயிலம் பாடி சானார் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராக்கம்மாள்(65) என்பவரை அவரது மகன் பழனிச்சாமி 45 என்பவர் குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். உயிரிழந்த ராக்கம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணைக்கு பின்னர் பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
News November 11, 2025
ஈரோடு: சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

ஆன்லைன் டாஸ்க் என்பது இணையம் சார்ந்த குற்றங்களைக் குறிக்கிறது, இதில் கணினிகள் மற்றும் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி மோசடி, அடையாள திருட்டு போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது Cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


