News April 3, 2025
ஈரோடு: மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலங்களிலும், 05.04.2025 காலை 11 முதல் மாலை 5 மணி வரை ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மின்பயனீட்டாளர்கள் மின் மீட்டர், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
ஈரோடு: 10th போதும் அரசு வங்கியில் வேலை APPLY NOW

ஈரோடு மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <
News January 19, 2026
நம்பியூர் அருகே துப்பாக்கி சூடு சம்பவம்!

நம்பியூர் அருகே கோட்டுபுள்ளாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கோபிநாத், குடும்பப் பிரச்சினை காரணமாகத் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த அவரது மனைவி பிருந்தா அளித்த புகாரின் பேரில், நம்பியூர் போலீசார் கோபிநாத்தை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 19, 2026
பெருந்துறை அருகே துணிகர சம்பவம்!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயகுமார், பெருந்துறை கருக்கன்காட்டூரில் தங்கி பணியாற்றி வருகிறார். கடந்த 15-ம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த மூன்று பவுன் தங்க தாலி்க்கொடியைத் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


