News May 14, 2024
ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட கிரிக்கெட் போட்டிக்கு 14 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் தேர்வு மே 19 காலை 7மணிக்கு ஈரோடு எஸ்.எஸ்.அகாடமி பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. 1.9.2010 தேதிக்கு பின்பு பிறந்தவர்கள் வயது சான்றிதழ், வெள்ளை சீருடை, காலணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் வர வேண்டும் என ஈரோடு மாவட்ட செயலாளர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 5, 2025
ஈரோடு: சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!

உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது அவசியம், இதில் எழுத்துக்கள் (பெரிய, சிறிய) எண்கள் மற்றும் குறியீடுகளின் கலவை இருக்க வேண்டும், மேலும் பொதுவான சொற்கள் அல்லது தொடர்ச்சியான எழுத்துக்களைத் தவிர்க்க வேண்டும், என மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வும், சந்தேகம் இருந்தால் சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண். 1930 டயல் செய்யவும்
News December 5, 2025
ஈரோடு: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

ஈரோடு மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News December 5, 2025
ஈரோடு: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


