News December 15, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ஈரோடு : இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிக்கு முக்கிய பாதுகாப்பு தலை கவசம் ஆகும். பொதுமக்கள் காவல்துறையினருக்கு பயந்து தலைக்கவசம் அணிய வேண்டாம் எனவும், தங்களின் பாதுகாப்புக்காக அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஹெல்மெட் லாக் அணிவது கட்டாயம் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

Similar News

News January 25, 2026

ஈரோடு: 10th போதும் அரசு வேலை APPLY NOW

image

ஈரோடு மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <>கிளிக்<<>> செய்து ஆன்லைனில் மூலம் மேலும் தகவல் அறிந்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

News January 25, 2026

நம்பியூர் அருகே சோகம்: தீயில் கருகிய 6 உயிர்கள்!

image

நம்பியூர் அடுத்த கொன்னமடை பகுதியில் செல்லப்பன் என்பவரது வீட்டுத் தோட்டத்திலிருந்த மாட்டுக்கொட்டகையில் மின்கசிவு காரணமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 5 வெள்ளாடுகள் மற்றும் 1 மாட்டுக்கன்று தீயில் கருகி உயிரிழந்தன. மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.இது குறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 25, 2026

ஈரோட்டில் உச்ச கட்ட பாதுகாப்பு!

image

நாட்டின் 77-வது குடியரசு தின விழா நாளை (ஜன.26) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஈரோடு ரயில் நிலையத்தில் காவல்துறையினர் நேற்று முதல் தீவிர பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் பைகள் மற்றும் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டன.

error: Content is protected !!