News October 11, 2025
ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 14.10.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்று பயன்பெறலாம் என ஈரோடு ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
ஈரோடு: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News December 11, 2025
ஈரோடு கடன் தொல்லையால் விபரீத முடிவு!

ஈரோடு கள்ளிப்பட்டி சஞ்சீவ் காந்தி வ வீதியைச் சேர்ந்த சாமிநாதன் 35 கட்டிட தொழிலாளி. இவருக்கு சத்யா என்பவர் உடன் திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சாமிநாதனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டின் சமையலறையில் தூக்கு மாட்டி இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 11, 2025
கோபியில் வசமாக சிக்கிய இருவர்!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நிச்சாம் பாளையம் கிராமத்தில், நேற்று (டிச. 10) வி.ஏ.ஓ. சுரேந்திர குமார் நடத்திய சோதனையில், அனுமதியின்றி நான்கு யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரி பிடிபட்டது. இதனையடுத்து லாரியைத் திங்களூர் போலீசில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில்மண் கடத்தியதாகச் சக்திவேல் மற்றும் ராஜேஷ்குமார் என்ற இருவரைப் போலீசார் கைது செய்தனர்.


