News August 19, 2025
ஈரோடு மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில் வேலை நாடுநரும், வேலை வழங்குநரும் இலவசமாக பங்கேற்கலாம். மேலதிக தகவலுக்கு 86754 12356, 94990 55942 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
Similar News
News December 13, 2025
ஈரோடு: மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமா?

சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையில் வீடுகளில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் பிரதமரின் சூரிய ஒளி மின்சார திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் பயன்பெற <
News December 13, 2025
அம்மாபேட்டையில் வசமாக சிக்கிய நபர்!

ஈரோடு: அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பூனாச்சி பேருந்து நிறுத்தத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டனர். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில், பரமத்தி வேலூர் அருகே உள்ள வடக்கு நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 48) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கருப்பசாமியைக் போலீசார் கைது செய்தனர்.
News December 13, 2025
சென்னிமலையில் கோர விபத்து!

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பெருந்துறை ரோடு அருகே உள்ள கேஸ் பங்க் அருகில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர், லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அந்த இளைஞர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


