News August 19, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு மழை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இரவு 7 மணி வரை ஈரோடு மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

Similar News

News January 22, 2026

மாயமான 7 மாணவர்கள் பத்திரமாக மீட்பு

image

அந்தியூர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் 7 பேர், சொந்த ஊருக்குச் செல்ல விடுதியிலிருந்து தப்பி வனப்பகுதி வழியாகச் சென்றனர். இதில் 4 மாணவர்கள் மதியமே மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3 பேரை வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பின், இரவு 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் நிலவிய பதற்றம் முடிவுக்கு வந்தது.

News January 21, 2026

ஈரோட்டில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

மின்பராமரிப்பு பணியால் நாளை(ஜன.22) சென்னிமலை நகர், அவல்பூத்துறை, தாளவாடி, கொளப்பலூர், முகாசி அனுமன்பள்ளி, ராயபாளையம், குமராபுரி, பசுவப்பட்டி, கொடுமணல், மல்லநாயக்கனூர், அயலூர், சூசைபுரம், உலகபுரம், ஞானிபாளையம், ராசாம்பாளையம், ஊஞ்சப்பாளையம், வெள்ளவலசு, பள்ளிபாளையம், மந்திரிபாளையம், அம்மன் கோவில்பதி, சமத்துவபுரம், கெட்டவாடி மற்றும் மல்லன்குழி பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

News January 21, 2026

ஈரோடு மக்களே செல்போனில் இது கட்டாயம்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377

2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639

3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093

8.ரத்த வங்கி – 1910

9.கண் வங்கி -1919

10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!