News April 3, 2025

ஈரோடு மக்களே! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <>இங்கு கிளிக் செய்து<<>> அறியலாம். இதை பிறர் பயன்பெற SHARE செய்யுங்கள்.

Similar News

News January 17, 2026

விஜயமங்கலம் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருப்பூர் பத்மாவதி நகரைச் சேர்ந்த இளங்கோ (55), கடந்த 11-ம் தேதி பைக் மூலம் பெருந்துறைக்குச் சென்றபோது விஜயமங்கலம் அருகே பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், பெருந்துறை GHல் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

பவானிசாகர் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

பவானிசாகர் அடுத்த பாகுதம்பாளையம், பாரதி நகர் பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த, பப்பண்ணன் (58) என்பவரை, பவானிசாகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 26 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பவானிசாகர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

புளியம்பட்டி: மது விற்றவர் கைது!

image

திருவள்ளுவர் தினமான நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கல்ராமனி குட்டையில், புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு நபர் மது பாட்டில்களை விற்பனை செய்ததை கண்டனர். விசாரணையில் கணக்கரசம்பாளையத்தை சேர்ந்த காளிமுத்து என்பது, மது பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிந்ததது. போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!