News April 11, 2024
ஈரோடு: புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். மேலும் விடுப்பு வழங்காத நிறுவனங்கள் புகார்களை 99943 80605 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என, ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
பவானி அருகே வேன் கவிழ்ந்து விபத்து!

பவானி அருகே மூன்றுரோடு பகுதியில் பவானியில் இருந்து மேட்டூர் நோக்கி ஈரோடு–மேட்டூர் பிரதான சாலையில் சென்ற மினி டெம்போ வேன் , திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் எதிர்திசையில் உள்ள புளியமரத்தை மோதி, பின்னர் ஒருபுறமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் டெம்போ ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 17, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்-100 க்கும், சைபர் கிரைம் எண்-1930 க்கும், குழந்தைகள் உதவி எண்-1098 எண்களும், போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
News November 16, 2025
ஈரோடு: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பது மற்றும் மீட்பு செய்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது முக்கிய முன்னுரிமையாக உள்ளது.
குழந்தைகள் பணம் சம்பாதிக்காமல், பள்ளிக்கு சென்று அறிவை சம்பாதிக்கட்டும் என மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியது.


