News March 25, 2024
ஈரோடு : பாதுகாப்பு பணியில் 1,400 போலீசார்

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் குண்டம் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர். எனவே ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர் உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 120 கண்காணிப்பு கேமரா போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 13, 2025
ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 14.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம்
நடைபெறவுள்ளது. இதில், ஈரோடு கோட்டத்தின் கீழ் உள்ள ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களுக்கான விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
ஈரோடு: வீடு கட்டப்போறீங்களா? IMPORTANT

மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
News November 13, 2025
ஈரோட்டில் பாஸ்ட் FOOD கடை வைக்க ஆசையா?

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக நவ.24 முதல் டிச.6.ஆம் தேதி வரை இலவச துரித உணவு தயாரிப்பு பயிற்சி நடைபெறுகிறது. இதில் பங்குபெறுவோருக்கு விடுதி வசதி, உணவு அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0424-2400338, 8778323213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஈரோடு மக்களே யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க!


