News August 19, 2024

ஈரோடு: சான்றிதழ் பிழை திருத்தம் செய்ய வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் +1, +2 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே பிழை இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்த சான்றிதழ்கள் சென்னை தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி, பிழை திருத்தம் அல்லது மாற்று அசல் சான்றிதழ் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News January 20, 2026

ஈரோட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வரும் ஜனவரி 23ம் தேதி காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை, ஐடிஐ, டிப்ளமோ முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8675412356, 9499055942 எண்களை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!

News January 20, 2026

ஈரோடு: 12th போதும் ஆதார் துறையில் சூப்பர்வைசர் வேலை!

image

ஈரோடு மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 20, 2026

ஈரோடு பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0424-2214282, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!