News October 20, 2025
ஈரோடு அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

ஈரோடு, பர்கூர் தாமரைக்கரையிலிருந்து ஈரட்டி செல்லும்வழியில், ஆப்பகூடல் கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையோரம் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் போலீசார் உடலை கைப்பற்றி, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
Similar News
News December 13, 2025
ஈரோடு: மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமா?

சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையில் வீடுகளில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் பிரதமரின் சூரிய ஒளி மின்சார திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் பயன்பெற <
News December 13, 2025
அம்மாபேட்டையில் வசமாக சிக்கிய நபர்!

ஈரோடு: அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பூனாச்சி பேருந்து நிறுத்தத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டனர். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில், பரமத்தி வேலூர் அருகே உள்ள வடக்கு நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 48) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கருப்பசாமியைக் போலீசார் கைது செய்தனர்.
News December 13, 2025
சென்னிமலையில் கோர விபத்து!

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பெருந்துறை ரோடு அருகே உள்ள கேஸ் பங்க் அருகில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர், லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அந்த இளைஞர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


