News August 8, 2025
ஈரோடு அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை

பவானிசாகர் காவலர் குடியிருப்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதி சேர்ந்த காவலர் சதீஷ்குமார் 35 என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இவருடைய மனைவி கீதா ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார், போலீஸ் விசாரணையில் தலைவலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.
Similar News
News November 8, 2025
ஈரோடு: ரூ.7,500 வெகுமதி.. மக்களே உஷார்!

ஈரோடு மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!
News November 8, 2025
ஈரோடு மாவட்ட காவலர் இரவு ரோந்து பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 7, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்கள் ஏற்றுவது வாகனங்களுக்கு சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையை உருவாக்குகிறது. எனவே எடை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.


