News November 18, 2024

ஈரோடு அருகே இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

இந்து மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் ஓம்காா் பாலாஜி கைதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் பெருந்துறையில் நேற்று  நடைபெற்றது.பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் ரங்கராஜன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில இலக்கிய அணி செயலாளா்,மாநில செயலாளா், மாநில பொதுச்செயலாளா் உள்பட 35 பேரை போலீசார் கைதுசெய்தனா்.

Similar News

News December 16, 2025

ஈரோட்டில் வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

image

ஈரோடு வி.வி.சி.ஆர். நகர், செல்வ விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த சகானி (52), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 7 ஆண்டுகளாக ஈரோட்டில் டைல்ஸ் வேலை செய்த அவர், நேற்று அதிகாலை அருகிலுள்ள காலிங்கராயன் வாய்க்காலில் கை, கால் கழுவ முயன்ற போது விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 16, 2025

ஈரோடு: மின் இணைப்பு இருக்கா? முக்கிய தகவல்..

image

பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் அருகே உள்ள மின்கோட்ட அலுவலகத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நாளை 17ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு ஈரோடு மேற்பார்வை பொறியாளர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர் பகுதியை சேர்ந்த மின் பயனீட்டாளர்களின் தங்களது நிறை,குறைகளை தெரிவிக்கலாம்,

News December 16, 2025

கவுந்தப்பாடி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

கவுந்தப்பாடி அடுத்த பழனிசாமி கவுண்டர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை, விற்பனை செய்வதாக கவுந்தப்பாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், போலியாக வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்ட எங்களை கொண்டு லாட்டரி என விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!