News August 22, 2025
ஈரோடில் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பு

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்ட தகவலில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. வரும் 24ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று வார ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பதிவு செய்பவர்களுக்கு இடம் தெரிவிக்கப்படும். பயிற்சியுடன் பாடக்குறிப்பு, போட்டித் தேர்வு தொகுப்பும் இலவசமாக வழங்கப்படும்.
Similar News
News January 24, 2026
ஈரோடு அருகே சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு பவானியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன். கட்டட தொழிலாளியான இவர், ஜாம்பை பகுதியில் உள்ள மேஸ்திரி தேவராஜ் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, அங்கே உள்ள டெய்லர் ரூமில் நேற்று முந்தினம் தூங்கியுள்ளார். தேவராஜ் நேற்று காலை அன்பழகனை எழுப்ப சென்றார். அறைக்குள் மின் விசிறியில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்