News May 1, 2024
ஈரோடு: இளம்பெண் பலியான சோகம்

ஈரோடு, எஸ்.எஸ்.பி நகர் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பவானி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த கவிதா (30) என்பவரும் வேலை செய்துள்ளார். இந்நிலையில், இன்று மதியம் கவிதா வேலை செய்தபோது, அவரது சேலை கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று (04/12/2025)சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 4, 2025
அறிவித்தார் ஈரோடு ஆட்சியர்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 19,97,189 வாக்காளா்களில் புதன்கிழமை வரை 19,28,231 (96.55 சதவீதம்) படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள 68,958 வாக்காளா்களிடம் கணக்கீட்டுப் படிவங்கள் பெறப்பட வேண்டியுள்ளன. மீதமுள்ள படிவங்களை திரும்பப் பெறுவது குறித்து பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தார்.
News December 4, 2025
ஈரோடு: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


