News March 20, 2024
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
Similar News
News February 7, 2026
தேனி: கந்துவட்டி தொல்லையா? உடனே CALL

தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க
News February 7, 2026
தேனி: அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய பெண்

ஆந்திராவிலிருந்து தேனி வழியாக பஸ்சில் கஞ்சா கடத்தி செல்வதாக தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு நேற்று (பிப்.6) ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரியகுளம் அருகே கோவை – குமுளி அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினார். சோதனையில் உமாதேவி (50) என்பவர் 24.590 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் உமாதேவியை கைது செய்தனர்.