News July 20, 2024
இலவச மின்சாரம் பெற ரூ.10,000 லஞ்சம்

இலவச மின்சாரம் பெற 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிருஷ்ணகிரி பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலமங்கலத்தில் இலவச மின்சாரம் பெறுவதற்காக வெங்கடேசன் என்பவரிடம் 10,000 ரூபாயை லஞ்சமாக பெற்ற தென்னரசு எனும் மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை. 09) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News July 9, 2025
பள்ளி கல்வித்துறை அமைச்சர் சார்பில் பாராட்டு சான்றிதழ்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் சாப்பர்த்தி பஞ்சாயத்து மோரன அள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் காளிரத்தினத்திற்கு (ஜூலை 7) பள்ளி கல்வித்துறை அமைச்சர் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் சார்பில் நேற்று வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
News July 9, 2025
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லுாரியில் பேச்சு போட்டி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லுாரியில் வரும், 21ல், அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சு போட்டியும், 22ல், கருணாநிதி பிறந்த நாள் பேச்சு போட்டியும் நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு காலையும், கல்லுாரி மாணவர்களுக்கு பிற்பகலும் நடக்கின்றன. அரசு உதவி பெறும், தனியார் பள்ளி கல்லுாரிகள், பொறியியல், மருத்துவம், பல்தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.