News July 19, 2024

இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு

image

திருச்சியில் முன்னாள் படை வீரரின் மனைவி, திருமணம் ஆகாத மகள்கள், மத்திய மாநில அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து, சான்று பெற்று இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். எனவே இதற்கான உரிய சான்றுகளுடன் வரும் 25ஆம் தேதிக்குள் துணை இயக்குனர், முன்னாள் படை வீரர் நலன் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Similar News

News July 9, 2025

திருச்சி: பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் எஸ்பி செ.செல்வநாகரத்தினம் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (09.07.2025) நடைபெற்றது. இதில் மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களிடமிருந்து 30மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News July 9, 2025

ஶ்ரீரங்கத்தில் குடிநீர் விநியோகம் தடை

image

ஶ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் ஜூலை 10ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர் , ஜே.கே. நகர், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்காநகர், சுப்ரமணிய நகர் புதியது, குடிநீர் வினியோகம் 11.07.2025 அன்று இருக்காதென மாநகராட்சி ஆணையர் இன்று தெரிவித்துள்ளார் .

News July 9, 2025

திருச்சி விமான நிலையில் வேலை! Apply பண்ணுங்க!

image

இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக 30,000 வரை வழங்கப்படுகிறது. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!