News January 12, 2025

இலவச டேலி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் (டேலி) இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சி ஜன.27.ல் துவங்குகிறது. இதில் சேர விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 9500314193 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்

Similar News

News November 16, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (15.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 15, 2025

66.90 அடியாக குறைந்த வைகை அணையின் நீர்மட்டம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து முதல் போக மற்றும் ஒருபோக பாசனம், மதுரை மாவட்ட தேவை மற்றும் குடிநீருக்காக என அணையில் இருந்து வினாடிக்கு 2299 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் நீர் வரத்து 1402 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து இன்று (நவ.15) 66.90 அடியாக குறைந்து காணப்படுகிறது.

News November 15, 2025

தேனி: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

image

தேனி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக் <<>>செய்யுங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!