News August 18, 2025

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.3 டன் பீடி இலைகள்

image

ராமநாதபுரம் இடையர்வலசை அருகே காவல்துறையினர் சோதனையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 1.3 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசிய தகவலின் அடிப்படையில் TN65K1868 வாகனத்தில் பதுக்கிய பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஓட்டுநர் ஆரிஸ் கைது செய்யப்பட்டார். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் எச்சரித்துள்ளார்.

Similar News

News December 17, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச 17) ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, தேனி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News December 17, 2025

ராமநாதபுரம்: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

கமுதி, காக்கூர், கீழக்கரை, கீழத்தூவல், முதுகுளத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (டிச 17) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக புளியங்குடி, ஆதனகுறிச்சி, கீழகண்ணிசேரி, விலங்குளத்தூர், கீழக்குளம், பெருங்கருணை, கமுதி நகர், மண்டல மாணிக்கம், பசுமபொன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

News December 16, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (டிச.16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!