News October 12, 2025

இராமநாதபுரத்தில் வேலை நிறுத்தம்

image

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். நேற்று தொடங்கிய போராட்டத்தால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இதனால் மீனவர்களின் தினசரி வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வர்த்தகம் வியாபாரம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

Similar News

News December 8, 2025

ராமநாதபுரம்: கடல் நீர் மட்டம் உயர்வு – அச்சத்தில் மீனவர்கள்

image

தொண்டியில் கடந்த சில நாட்களாக கடல் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து வருகிறது. புதுக்குடி கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் மரைன் போலீஸ்ஸ்டேஷனை சில நாட்களுக்கு முன்பு கடல் நீர் சூழ்ந்தது. நேற்று மகாசக்திபுரத்தில் கடல் நீர் மட்டம் உயர்ந்தது. அதிர்ச்சியடைந்த மீனவர்கள் படகுகளை நங்கூரம் இட்டு பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்திற்கு பிறகு நீர் மட்டம் குறைந்தது.

News December 8, 2025

ராமநாதபுரம்: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை!

image

ராமநாதபுரம் மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச.25க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.42,478 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில், ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 8, 2025

ராமநாதபுரம் அருகே 160 பவுன் நகை கொள்ளை

image

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை அருகில் வசிப்பவர் அர்ச்சுனன், 62; ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று காலை இவரது வீட்டின் பின்பக்க கேட், கதவுகள் உடைக்கப்பட்டிருப்பது குறித்து அப்பகுதி மக்கள், அர்ச்சுனனுக்கு தகவல் தெரிவித்தனர்.வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் 160 சவரன் தங்க நகைகள், ரூ.18 லட்சம் ரூபாய் மர்ம நபர்களால் திருடப்பட்டதாக, ஆர்.எஸ்.மங்கலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

error: Content is protected !!