News March 31, 2025

இராணுவத்தில் அக்னிவீர் பிரிவில் பணி

image

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆள்சேர்ப்பு 2025 ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 10 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 6 பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 8, 2025

கூலி தகராறில் பெயிண்டர் கொலை: ஈரோட்டில் அதிர்ச்சி

image

ஈரோடு, அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஆண்டவர்(55). இவரிடம் வேலை பார்த்து வந்த சதீஷ் (38) என்பவர்,நேற்று முன்தினம் தனக்கு தர வேண்டிய கூலி ₹2,000 கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சதீஷ், ஆண்டவரின் நெஞ்சுப் பகுதியில் அடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ஆண்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை!

News July 8, 2025

ஈரோடு: திருவிழா பூச்சாட்டுதலுடன் ஆரம்பம்

image

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கேசரிமங்கலம் கிராமம் சேகண்டியூர் பகுதியில் அமைந்துள்ள குட்ட முனியப்பன் கோவில், ஆடி 1 பொங்கல் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதில் இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த, குட்ட முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டனர்.

News July 7, 2025

ஈரோடு: சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்

image

ஈரோடு அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுவன், கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு கடித்து, சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சிறுவனுக்கு பாம்பு விஷமுறிவு மருந்து 20 பாட்டில்கள் செலுத்தி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் 72 மணி நேரத்திற்கு பின் சிறுவனுக்கு நினைவு திரும்பியது. சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்களை, சிறுவனின் பெற்றோர் பாராட்டினர்.

error: Content is protected !!